குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை
குழந்தையின்மை –மலட்டுத்தன்மை ஹோமியோபதி சிகிச்சை
குழந்தையின்மை – மலட்டுத்தன்மை என்பது ஒரு மனிதனால் புதிதாக ஒரு உயிரினத்தை உருவாக்கவல்ல கருகூடல் என்னும் செயற்பாட்டில் பங்கு கொள்ளும் உயிரியல் ஆற்றலின்மையைக் குறிக்கும். இந்த மலட்டுத்தன்மை ஆண்களிலும், பெண்களிலும் இருக்கலாம். இந்த மலட்டுத்தன்மை என்பது சிலசமயம் கருத்தரிப்பின்போது, வளர்ந்து வரும் கருவை முழுமையான கருக்காலத்தைக் கடந்து குழந்தையை பெற்றுக் கொள்ள முடியாமல் போகும் பெண்களின் ஆற்றலின்மையைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது. இந்த மலட்டுத்தன்மைக்கு பல காரணிகள் இருப்பினும், அவற்றில் பல மருத்துவ சிகிச்சை முறைகளால் மாற்றியமைக்கப்பட்டு, மலட்டுத் தன்மையிலிருந்து விடுபட உதவுகின்றது. இவற்றை மலட்டுத்தன்மை சிகிச்சை எனலாம்.
மலட்டுத்தன்மை அற்ற வளமான பெண்களில் முட்டை வெளியிடலுக்கு சில நாட்கள் முன்னரும், பின்னரும் கருகூடல் தன்மை காணப்படும். மாதவிடாய் சுழற்சியின் ஏனைய நாட்களில் இவ்வாறான கருகூடல் தன்மை காணப்படுவதில்லை.
பெண்களுக்கான குறைகள்
- பிறவியிலேயே கருப்பை, சினைப்பை, கருக்குழாய் வளர்ச்சியின்மை.(Immature Uterus, ovaries, Fallopian tube)
- கருப்பை கட்டிகள், கருப்பை இறங்குதல்.(uterine fibroid, uterine prolapse)
- கர்ப்பப்பை மென்தோல் பாதிப்பு (endometriosis)
- இரட்டை கர்ப்பப்பை (Bicorbenate Uterus)
- சினைப்பை அழற்ச்சி (Ovaritis)
- சினைப்பை கட்டிகள் (Ovarian Cryst)
- கருக்குழாய் அடைப்பு( tubal block)
- வெள்ளைப்படுதல்.(Leucorrhoea – White Discharge)
- மாதவிடாய் கோளாறுகள் (Dysmennorrhoea – வலியுடன் கூடிய மாதவிடாய்,
- அதிக ரத்தப்போக்கு, மாதவிடாய் நாள் தவறி வருதல் – Irregular Menses)
- தொடர் கருச் சிதைவு (Habitual abortion)
- உடல் பருமன் (Obesity)
- கன்னிதிரை கிழியாமல் இருத்தல்.(Thick hymen)
- சுரப்பி இயக்கக்கோளாறுகள் – தைராய்டு(Thyroid Problems) பிட்யூட்டரி,
- சில தொற்று நோய்கள் (புட்டாளம்மை, காசநோய்-Tuberculosis, பால்வினை நோய்கள்-Sexually Transmited Disease)
- சில மருந்துகள் (அதிகமான ஆங்கில வலி நிவாரணி மாத்திரைகள்-Pain Killeres, பாலுணர்ச்சி தூண்டும் மருந்துகள்)
- இளம்வயதில் திருமணம்,
- மனபக்குவம் அடையாமல் உடலுறவை நினைத்து பயம் வெறுத்தல், மற்றும் அருவருப்பு.
- மன இறுக்கம்,
- மனவேதனை.
- மன உளைச்சல்,
மலட்டுத்தன்மை சிகிச்சை எனப்படுவது, ஆண்களிலோ, பெண்களிலோ அல்லது இருவரிலும் கூட்டாகவோ, குழந்தை ஒன்றைப் பெற்றுக்கொள்ள முடியாத மலட்டுத்தன்மை காணப்படும் போது, அந்நிலையை அகற்றி, குழந்தைப் பேற்றைக் கொடுப்பதற்காக வழங்கப்படும் சிகிச்சையாகும். . திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆகி கருத்தடை சாதனங்கள் உபயோகிக்காமல் குழந்தை உருவாகவில்லை என்றால் கணவன் மனைவி இருவரும் மருத்துவ பரிசோதனையும் மருத்துவ சிகிச்சையும் மேற்கொள்ள வேண்டியது மிகஅவசியம்.
ஒருசில பிறவிக் குறைபாடுகள் தவிர ஆண்களுக்கான இதரப் பிரச்சனைகளுக்கும், பெண்களுக்கான பிரச்சனைகளுக்கும் பக்க விளைவு இல்லாத பாதுகாப்பான ஹோமியோ மருத்துவ சிகிச்சை பலனலிக்கும். மலட்டுத்தன்மைக்கான காரணிகள் பற்றியும், சிகிச்சைகள் பற்றியும் தெளிவான விழிப்புணர்வுடன் ஹோமியோ சிகிச்சை எடுத்துக்கொள்ளும் போது, மன அழுத்தம் குறைவாகி சிகிச்சை வெற்றிபெறும்,
மேலும் விவரங்களுக்கும் சிகிச்சைக்கும் தொடர்புகொள்க
Comments
Post a Comment