ஹோமியோபதி: நோய் முதல் நாடும் சிகிச்சை

ஹோமியோபதி: நோய் முதல் நாடும் சிகிச்சை ஒவ்வொரு மனிதரும் தனித்துவமானவர் என்பது போலவே, ஒவ்வொரு மனிதருக்கு வரும் நோயும், அதன் காரணங்களும் தனியானவை. ஒருவருக்குத் தலைவலி வருகிறதென்றால், அதற்கு ஒற்றைப் பொது மருந்து கிடையாது என்பதே ஹோமியோபதி காட்டும் வழிமுறை. ஒவ்வொரு உயிரும், அதற்கே உரிய பிரத்யேக உயிர்சக்தியால் கட்டுப்படுத்தப்படவும் நிர்வகிக்கவும் படுகிறது என்பதை உலகுக்கு முதலில் சொன்னவர் டாக்டர் ஹானிமன். ஜெர்மனியைச் சேர்ந்த அலோபதி மருத்துவரான டாக்டர் சாமுவேல் ஹானிமன், 1796ஆம் ஆண்டில் கண்டுபிடித்த மருத்துவ முறைதான் ஹோமியோபதி. அலோபதி மருத்துவத்தின் பக்கவிளைவுகள் குறித்துப் பெரும் சங்கடம் கொண்டிருந்த டாக்டர் ஹானிமனுக்கு, ஹோமியோபதி மருத்துவம் பெரும் மனநிம்மதியைத் தந்தது. டாக்டர் ஹானிமனுக்குப் பிறகு மருத்துவ அறிவியல் எத்தனையோ வளர்ச்சிகளைக் கண்டுவிட்டது. முதலில் நுண்ணோக்கி வந்தது. அதன்வழி நுண்ணுயிர்களைப் பார்க்கும் தொழில்நுட்பம், மருத்துவ அறிவியலில் பெரிய திருப்புமுனையாக இருந்தது. மரபணு ஆய்வுகள் மேலும் பல சாளரங்களைத் திறந்துவிட்டன. ஒவ்வொரு தனிமனிதரின் மரபணுவும் பிரத்யேகக் குணாம் சங்களை...