
சிறுநீர்க்கல்லுக்கு ஹோமியோபதி சிகிச்சை சிறுநீர்க்கல் சிறுநீர்க்கல் பொதுவாக “சிறுநீரகக்கல்” என்றே வழக்கமாக குறிப்பிடப்படுகிறது. சிறுநீர்க்கல் எவ்வாறு உருவாகிறது? சிறுநீர்க்கற்களை உருவாக்கும் மூலப்பொருட்கள் பல இருப்பினும் அவற்றுள் முதன்மையான கால்சியம், ஆக்ஸலேட், யூரிக் அமிலம் ஆகியவை பொதுவாக சிறுநீரில் கரைந்து கழிவுகளாக வெளியேறுகின்றன. ஆனால் சிலரின் சிறுநீரில் இந்தக் கழிவுப்பொருட்கள் அளவுக்கு அதிகமாக இருப்பதால் முழுவதுமாக சிறுநீரில் கரைவதில்லை. கரையாத கழிவுகள் சிறுநீர் உறுப்புகளில் படிகங்களாகத் தங்கி. பின்பு படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக உருவாகின்றன. மூத்திரக்காய், வடிகுழாய், சிறுநீர்ப்பை என எந்த இடத்திலும் கற்கள் உருவாகலாம். வடிவமும், அளவும் : கற்கள் பல வடிவங்களிலும், அளவுகளிலும் காணப்படுகின்றன. படிகங்கள் ஒன்று சேர்ந்து கற்களாக மாறுவதால் பல கூர்முனைகளைக் கொண்டுள்ளன். கல்லின் வரலாறு : 1. மனித உடலில் சிறுநீர்க்கல் எப்பொழுது உருவாகத் தொடங்கியது என்ற ஆராய்ச்சிகளில் மிகவும் தொன்மை( ! ) வாய்ந்த ஆதாரமாகக் கருதப்படுவது கி.மு. 4800 காலத்திய எகிப்து நாட்டின் ம...