Posts

Showing posts from August, 2013

ஜின்செங்

Image
ஜின்ஜெங்: ஒரு புதிய கண்டுப்பிடிப்பு.! * அமெரிக்காவிலும், இங்கிலாந்திலும் ஒரு வேர் விறுவிறுப்பாக விற்பனையாகிறது. அதன் பெயர், ஜின்ஜெங். இது சீனாவில் உற்பத்தியாகிறது. * இந்த வேரை அரைத்துக் குடிக்கிறார்கள். மாத்திரை, கேப்ஸ்யூல் ஆக்கி விழுங்குகிறார்கள், தேநீர், காபியில் கலந்து பருகுகிறார்கள். மதுபானத்தில் சேர்த்துக் குடிக்கிறார்கள். சோப்பிலும் சேர்த்து உடம்பில் தேய்த்துக் குளிக்கிறார்கள். * காரணம், ஜின்செங் ஆண்மைக் குறைவைப் போக்குகிறது. மலேரியா, இஸ்மோரியா, தலைவலி, கேன்சர், சாதாரண ஜலதோஷம் ஆகியவற்றுக்கு நல்ல மருந்தாக உள்ளது. * ஜின்செங் செடி 5 ஆயிரம் ஆண்டுகளாக சீனாவில் வளர்க்கப்படுகிறது. 1948-ல் இளம் ரஷ்ய விஞ்ஞானி ஒருவர், ஜின்செங் வேரை ராணுவ வீரர்களுக்குக் கொடுத்துப் பார்த்தார். * உடனே அவர்கள் அதிகமான சுறுசுறுப்பு அடைந்து வேலை செய்தார்கள். அதிலிருந்து ஐரோப்பாவில் ஜின்செங் வேர் பிரபலமாகிவிட்டது. சமீப ஆண்டுகளில் பல கோடி ரூபாய்க்கு ஜின்செங் வேர்களை அமெரிக்கா வாங்கியுள்ளது. * ஜின்செங்கின் மருத்துவக் குணங்களைப் பற்றி ஆராய பல சர்வதேச மாநாடுகள் நடைபெற்று வருகின்றன. * இர...

இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்

Image
உடலில் இரத்தத்தை அதிகரிக்க இரத்தத்தை அதிகரிக்கும் உணவுகள்... மாதுளை: மாதுளைச் சாறு இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவை மேலேறச் செய்கிறது. ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து, கட்டற்ற மூலக்கூறுகளோடு போராடி, ஆபத்து விளைவிக்கக்கூடிய இரத்த உறைவுகளில் இருந்து காத்து, அருஞ்சேவை புரிகிறது. இவ்வாறு செய்வதன் மூலம் கொஞ்சம் கொஞ்சமாக, இரத்த ஓட்டத்தை சீராக்கி, இரத்தத்தின் ஆக்ஸிஜன் அளவுகளை இவை அதிகப்படுத்துகின்றன. நன்னாரி வேர்: மூலிகைகளில் ஒன்றான நன்னாரி வேர், உடலில் உள்ள இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க சிறந்தது. அதிலும் இந்த வேரில் அதிகமான ஆன்டி-செப்டிக் பொருள் இருக்கிறது. இது இரத்ததில் இருக்கும் கிருமிகளை அழித்து, சுத்தமாக வைக்கிறது. கற்றாழை: கற்றாழையில் இரத்தத்தில் ஏற்படும் அழற்சியை தடுக்கும் பொருள் அதிக அளவு உள்ளது. ஆகவே இவற்றை சாப்பிட்டாலும் இரத்த அணுக்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பீட்ரூட்: இதில் அதிகமான அளவு இரும்புச்சத்து இருப்பதோடு, உடலுக்கு தேவையான அளவு இரத்த அணுக்களை அதிகரிக்கும் புரோட்டீன் இருக்கிறது. மேலும் இதை உண்பதால் உடலில் இரத்த ஓட்டம் அதிகரி...

சப்போட்டா பழம்..!

Image
சப்போட்டா பழம்..! 1) தாவர இயல் பெயர், ‘அக்ரஸ் சப்போட்டா’ (Achars sapota). . சப்போட்டேசியே (sapotceae) என்னும் தாவரக் குடும்பத்தைச் சேர்ந்தது. சப்போட்டாவிற்கு, ‘அமெரிக்கன்புல்லி’ என்று ஒரு சிறப்புப்பெயர், செல்லப் பெயர் உண்டு. 2) 100 கிராம ் சப்போட்டாப் பழத்தில் புரதம் 1.0 கிராம், கொழுப்பு 0.9 கிராம், நார்ச் சத்து 2.6 கிராம், மாவுப்பொருள் 21.4 கிராம், கால்சியம் 2.1 மில்லி கிராம், பாஸ்பரஸ் 27.0 மில்லி கிராம், இரும்புச் சத்து 2.0 மில்லி கிராம், தரோட்டின் 97 மைக்ரோகிராம், ரிபோஃபிளோவின் 0.03 மில்லி கிராம், நியாசின் 0.02 மில்லி கிராம் மற்றும் வைட்டமின் சி 6.1 மில்லி கிராம் உள்ளது. தினமும் இரண்டு சப்போட்டா பழம் சாப்பிட்டால் உச்சி முதல் உள்ளங்கால் வரை பலன் தரும். இளமைக்கு கியாரன்டி. 3) சப்போட்டா பழம், ரத்த ஓட்டத்தை சீராக்கி, கொழுப்பை- நீக்குகிறது. வாய்ப்புண், வயிற்றெரிச்சல், மூல நோய் மற்றும் மலச்சிக்கலுக்கும் தீர்வு தருகிறது., எலும்புகள் வலுவடையும் 4) இரவில் உறக்கம் வராமல் கஷ்டப்படுபவர்களுக்கு அருமருந்து இந்த சப்போட்டா. இதை சாறாக்கி அருந்தலாம். பழக்கூழ், ஜாம், சிரெப...

வியக்கவைக்கும் ஹோமியோபதி

Image
வியக்கவைக்கும் ஹோமியோபதி மருத்துவம் , நோய்க்கான காரணியே நோயைத் தீர்க்கும் மருந்து ! வியக்கவைக்கும் ஹோமியோபதி ரகசியம் உலகின் மிகவும் இளமையான மருத்துவம் என்ற வசீகரப் பெயர் ஹோமியோபதிக்கு உண்டு . கத்தியின்றி ரத்தமின்றி நோய்களைக் குணமாக்குவதால் , பிறந்த 250 ஆண்டுகளிலேயே உலக அளவில் அதிகம் பயன்படுத்தப்படும் மருத்துவத்தில் இரண்டாம் இடத்தைப் பிடித்திருக்கிறது ஹோமியோபதி . நாள்பட்ட நோய்களுக்கு ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு என்பது தெரியும் . ஆனால் , முதல் உதவிச் சிகிச்சைக்கே ஹோமியோபதியில் நல்ல பலன் உண்டு . '' நோய்க்கான காரணியை வைத்தே நோயைக் குணப்படுத்தும் மாயாஜாலத்தை ஹோமியோபதி எப்படி நிகழ்த்துகிறது ?'' '' ஹோமியோபதி மருத்துவ முறையைக் கண்டுபிடித்த டாக்டர் சாமுவேல் ஹானிமன் ஓர் அலோபதி மருத்துவர் . அவர் இந்த மாற்று மருத்துவ முறையைக் கண்டறிந்த விஷயமே சுவாரஸ்யமானது . ' மலேரியாவை உண்டாக்கும் சின்கோனா பட்டைக்கு மலேரியாவைக் குணமாக்கும் ஆற்றலும் உண்டு ’ என்று அவர் ஒரு புத்தகத்...