ஆரோக்கியத்திற்கு கீரைகள்

ஆரோக்கியத்திற்கு கீரைகள் கீரையின் மகத்துவத்தை வார்த்தை களில் அடக்க முடியாது . மனிதனின் ஆகாரத்தில் முக்கிய இடம் பெற்றது கீரை . இதில் பலவகை இருந்தாலும் , அனைத்து வகையான கீரைகளும் மனிதனின் ஆரோக்கியத்தில் முக்கியப் பங்காற்றுகின்றன . கீரையின் மகத்துவ பலன்களை இங்கே பார்ப்போம் . * புதினாக் கீரையை அடிக்கடி சாப்பிட்டு வந்தால் நாக்கில் சுவை உணர்வு அதிகமாகும் . வாய் சுவையற்று இருந்தால் மாறி விடும் . வாந்தி போன்ற குமட்டல் நிற்கும் . நல்ல பசியும் உண்டாகும் . ரத்தத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி , சுத்தமாகும் . வயிற்று பிரச்சினைகளும் தீரும் . * அரைக்கீரை என்று அழைக்கப்படும் அறுகீரை காய்ச்சல் , ஜன்னி , கபம் , வாதம் போன்ற நோய்களை நீக்கும் ஆற்றல் பெற்றது . ஆனால் வாயுக் கோளாறுகளை உண்டாக்கும் . * முருங்கைக் கீரையில் இரும்புச் சத்து அதிகம் . முருங்கைக் கீரையுடன் நெய் கலந்து , தினமும் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் உடல் உறுதி பெறும் . ஆனால் புளி சேர்க்கக் கூடாது . உடலில் உள்ள கெட்ட கொழுப்பு கரையும...